Categories
அரசியல் மாநில செய்திகள்

TVல எல்லாரும் பார்த்தீங்க… ADMKவில் பிளவே கிடையாது… ஹேப்பி மோடில் எடப்பாடி ..!!

அதிமுக தலைமை அலுவகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி,  அதிமுகவில் பொதுச்செயலாளர் தேர்தல் 6 மாத காலத்தில் நடத்தப்படும் என பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது உண்மை. ஆனால்  அவர்கள் ( ஓபிஎஸ் ) நீதிமன்றத்திற்கு சென்று விட்டார்கள். நீதிமன்றம் சென்று விட்டதனால்,  அந்த பொதுச்செயலாளர் தேர்தல் தடைப்பட்டது. விரைவாக பொதுச்செயலாளர் தேர்வு செய்கின்ற தேர்தல் பணி தொடங்கும்.

ஓபிஎஸ் தரப்பு மேல்முறையீடு போயிருக்கிறார்கள். நாங்களும் கேவியட் மனு போட்டிருக்கின்றோம். அந்த விசாரணையில் எங்கள் தரப்பினுடைய ஆதாரங்களை சமர்ப்பித்து நாங்கள் வாதாடுவோம். அதிமுவில் பிளவு என்பது கிடையாது. ஒரு சிலர் கட்சிக்கு எதிராக செயல்பட்ட காரணத்தினால் பொதுக்குழு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கிறது. பிளவு என்பது இரண்டு அணியாக பிரிந்தால் தான் பிளவு. இது பிளவு கிடையாது.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு துரோகம் விளைவிக்கின்றவர்கள், இந்த கட்சிக்கு அவபெயரை உருவாக்குகின்றவர்கள், கட்சிக்கு எதிராக செயல்படுகின்றவர்கள், அவர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளது   பொதுக்குழு. ஓபிஎஸ் தரப்பு மன்னிப்பு கேட்டு மீண்டும் வந்தால் ஏற்றுக்கொள்ள வாய்ப்பு இருக்கா என்ற கேள்விக்கு, மன்னிப்பு கேட்டால் எப்படி ஏற்றுக் கொள்வார்கள் தொண்டர்கள். நல்லா எண்ணிப் பாருங்க. நீங்க எல்லாம் இங்க வந்திருக்கீங்க. எல்லா ஊடகத்திலும் காமிச்சீங்க. ஒரு கட்சியினுடைய உயர்ந்த பொறுப்பில் இருக்கின்றார்.

சாதாரண தொண்டன் செய்யவில்லை. இந்த கட்சியினுடைய உயர்ந்த பொறுப்பு. அந்த பொறுப்பு என்ன பொறுப்பு என்று உங்களுக்கு தெரியும் ? அந்த பொறுப்பு வகிக்கின்ற ஒருவரே கொள்ளை கூட்டத்துக்கு தலைமை தாங்குற மாதிரி, டெம்போ ட்ராவல் வேனில் வருகிறார். இரண்டு பக்கமும் ரவுடிகளை அழைத்துக்கொண்டு வருகிறார். அதற்கு காவல்துறை பாதுகாப்போடு வராங்க. அப்படி பிரதான கேட்ட உடைக்கிறாங்க.

அந்த ரவுடிகள் எல்லாம் வந்து பிரதான கதவை காலால் எட்டி உதைக்கின்ற காட்சி உங்க தொலைக்காட்சிகள் எல்லாம் காண்பித்தீர்கள். நாட்டு மக்களை பார்த்தார்கள், நாங்கள் தொண்டர்கள் மட்டுமல்ல, நாட்டு மக்கள் எல்லாரும் பாத்தீங்க, ஊடகத்திலும் வந்தது. இப்படிப்பட்டவர்களை எப்படி தொண்டர்கள் மன்னிப்பார்கள் ? தொண்டர்கள் எப்படி ஏற்றுக் கொள்வார்கள் ? என தெரிவித்தார்.

Categories

Tech |