Categories
உலக செய்திகள்

எவரெஸ்ட் சிகரத்தில்….. சீனா செய்த வேலை…. உலக நாடுகள் அதிருப்தி…!!

உலக நாடுகள் கொரோனாவை விரட்டும் பணியில் ஈடுபட்டு இருக்கக்கூடிய இந்த சூழ்நிலையில், எவரெஸ்ட் சிகரத்தில் சீனா செய்த காரியம் உலக நாடுகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலக நாடுகளில் பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தற்போது சீனாவில் அந்த வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டுவிட்டது. ஆனால் உலக நாடுகள் அதனை கட்டுப்படுத்துவதில் திணறி வருகின்றனர். அமெரிக்கா போன்ற நாடுகளில் ஏற்படும் இறப்பு விகிதம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த சூழ்நிலையில் உலக நாடுகள் கொரோனா நோயை விரட்டும் பணியில் ஈடுபட,

சீன நாடானது எவரெஸ்ட் சிகரத்தில் 5,300 அடி, 5,800 அடி 1,500 அடி வீதம் 5G டவர்களை நிறுவியுள்ளது. இதன்மூலம் உலகிலேயே அதிக உயரத்தில் 5G டவர் அமைத்த பெருமையை சீனா பெற்றுள்ளது.

மேலும் இதில் உள்ள கேமரா மூலம் 24 மணி நேரமும் எவரெஸ்ட் சிகரத்தை கண்காணித்து மக்களுக்கு நேரடியாக அதன் காட்சிகள் ஒளிபரப்பாகும் படி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சீனாவின் இந்த செயல் உலக நாடுகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |