Categories
உலக செய்திகள்

“தக தக தங்க ஹோட்டல்” பாத்ரூமில் கூட தங்கம்…. ஒரு இரவுக்கு எவ்வளவு தெரியுமா…??

உலகிலேயே முதன்முறையாக ஹோட்டல் முழுவதும் தங்க மூலாம் பூசப்பட்டுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

வியட்நாமின் ஹனோய் மாவட்டத்தில் உள்ள ஒரு ஏரிக்கரையில் பக்கத்தில் டோல்ஸ் ஹனோய் கோல்டன் லேக் ஹோட்டல் என்ற பெயரில் ஒரு உணவகம் அமைந்துள்ளது. இந்த ஹோட்டலில் தான் உலகிலேயே முதல் முறையாக முற்றிலும் தங்க முலாம் பூசப்பட்ட தங்கும் விடுதி உள்ளது. இங்கு குளியலறை முதல் படுக்கையறை வரை அனைத்துமே 24 காரட் தங்க முலாம் பூசப்பட்டுள்ளது காண்போரை வியக்க வைக்கிறது. கோல்டன் ஹோட்டல் இந்த வருடத்தின் ஆரம்பத்தில் திறக்கப்பட்டது. பின்னர் உலகின் முதல் தங்க முலாம் பூசப்பட்ட ஹோட்டல் என்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

தங்கமுலாம் பூசப்பட்ட இங்கு குளியல் தொட்டிகள், கழிப்பறைகள் என அனைத்துமே தங்கத்தால் பூசப்பட்டுள்ளது. இந்த ஹோட்டலின் கூரையின் மேல் 24 காரட் தங்கத்தினாலான டைல்ட்  உள்ளது. ஆனால் இங்கு ஒரு இரவுக்கு வாடகை 250 டாலர்(ரூ.3800) தான் என கூறப்படுகின்றது. மேலும் கொடுக்கப்படும் ஒவ்வொரு உணவுடனும் மர்மமான தங்க பொருட்கள் வழங்குவதாகவும், ஹோட்டல் காப்பி கப்  கூட 24 காரட் தங்க கோப்பை என்றும் அங்கு சென்று வந்தவர்கள் கூறியுள்ளனர். மேலும் இந்த ஓட்டல் உலக அளவில் பிரபலமாகி உள்ளதால் மக்கள் இந்த ஓட்டலை பார்ப்பதற்காகவே படையெடுத்து வருகின்றனர் என்று கூறப்படுகிறது.

Categories

Tech |