Categories
கிரிக்கெட் விளையாட்டு

இவரு பவுலிங் போடலனா ….”ஹர்திக் பாண்டியா டீம்ல விளையாடுறதுக்கு தகுதி இல்ல”…. சரன்தீப்சிங் பேச்சு …!!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தேர்வுக் குழு உறுப்பினரான சரன்தீப்சிங், ஹர்திக் பாண்டியாவைப் பற்றி கூறியுள்ளார்.

இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய அணி உலகக் கோப்பை டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியிலும் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் விளையாட உள்ளது. ஆனால் இந்தப்போட்டியில் இந்திய அணி வீரர் ஹர்திக் பாண்டியா இடம்பெறவில்லை. இதுபற்றி சரண் தீப் சிங் கூறும்போது, ஹர்திக் பாண்டியா விற்கு முதுகுப்பகுதியில் அறுவை சிகிச்சை செய்யப் பட்டதால் அவரால் வழக்கம்போல பவுலிங்  செய்ய முடியவில்லை என்று கூறினார். ஒருநாள் தொடரில் 10 ஓவர்கள்  மற்றும் டி20  போட்டிகளில் 4 ஓவர்களில் அவர்  கட்டாயம் பந்துவீச வேண்டும் என்றும், ஒரு பேட்ஸ்மேனாக மட்டும் செயல்பட முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

இதனால் ஹர்திக் பாண்டியா,பந்துவீச வில்லை என்றால், அணியில் காம்பினேஷனை பெரிய அளவில் பாதித்து விடும். தற்போது அணியில் ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் மற்றும் அக்ஷர் பட்டேல் ஆகியோர்   ஆல்-ரவுண்டராக இருந்து வருகின்றனர் .அதேபோன்று ஷர்துல் தாகூர் ஆல்-ரவுண்டராக செயல்பட்டு வருகிறார். எனவே ஆல்-ரவுண்டரான  ஹர்திக் பாண்டியா , பவுலிங்  செய்யவில்லை என்றால், இந்த வீரர்களால் செய்ய முடியும். இளம் வீரர்  பிரித்வி ஷாவும் சிறந்த பேட்ஸ்மேனாக விளங்கி வருகிறார். முன்னாள் வீரராக சேவாக் எப்படி விளையாடினாரோ ,அதே போன்றே பிரித்வி  ஷாவும் விளையாட முடியும். இதனால் இளம் வீரரான பிரித்வி  ஷாவை  ஓரங்கட்ட கூடாது, என்றும் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்

Categories

Tech |