Categories
உலக செய்திகள்

இவங்களுக்கு இனிமேல் இதை விற்காதீங்க …. ஆதரவு வழங்கிய நாடுகள் …. ஐ.நா-வின் அதிரடி முடிவு …!!!

மியான்மர் நாட்டுடனான ஆயுத விற்பனையை  நிறுத்துமாறு ஐ.நா. அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மியான்மர் நாட்டில் கடந்த பிப்ரவரி மாதம் ஜனநாயக முறையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்க ஆட்சியை ராணுவம் கைப்பற்றி  சர்வாதிகார ஆட்சியை நடத்தி வருகிறது. இந்த சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடும் மக்களை ராணுவத்தினர் தாக்கியும், துப்பாக்கி சூடு போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர் . இந்நிலையில் ஐ.நா. பொது சபை இந்த ராணுவ ஆட்சிக்கு எதிராக தீர்மானத்தை ஏற்றுக்கொண்டுள்ளது. அதில் மியான்மர் நாட்டிற்கு  வழங்கப்படும் ஆயுத விற்பனையை நிறுத்துமாறு மற்ற நாடுகளுக்கு ஐ.நா. சபை இந்த அழைப்பை  வெளியிட்டுள்ளது.

மேலும் ராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட  தலைவர் ஆங் சான் சூகி உட்பட பல அரசியல் தலைவர்களை விடுதலை செய்யவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் மக்களுக்கு எதிராக ராணுவத்தினர் நடத்தும் தாக்குதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் இந்த முடிவை எடுத்துள்ளது. இதற்கு மியான்மரில் அதிகமாக ஆயுதங்களை விற்பனை செய்யும் ரஷ்யா, சீனா உட்பட 36 நாடுகள் வாக்களித்துள்ளன. அதோடு 119 நாடுகள்  இதற்கு ஆதரவு தெரிவித்த நிலையில் பெலாரஸ் மட்டும் இதற்கு எதிராக வாக்களித்துள்ளது.

 

Categories

Tech |