ஐபில் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின், பீல்டிங் கோச் ஜேம்ஸ் பம்மண்ட்,அணியின் சீனியர் வீரர்கள் மீது குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
14வது ஐபிஎல் தொடர் கடந்த மாதம் 9ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. ஆனால் ஐபிஎல் போட்டியில் இடம்பெற்ற சில வீரர்களுக்கு ,கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் போட்டி பாதியிலேயே ஒத்தி வைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்தது. இந்நிலையில் 29 லீக் போட்டிகளை வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ள நிலையில் மீதமுள்ள போட்டிகளை எப்போது நடத்தலாம் என்று பிசிசிஐ ஆலோசித்து வருகிறது.இதனால் ஐபில் தொடரில் இடம்பெற்றுள்ள வீரர்கள் நாடு திரும்பியுள்ளனர் . குறிப்பாக நியூஸிலாந்து வீரர்களான டிரென்ட் போல்ட், மாட் ஹென்றி, ஜிம்மி நீஷம், பௌலிங் கோச் ஷேன் பான்ட் மற்றும் மும்பை அணியின் பீல்டிங் கோச் ஜேம்ஸ் பம்மண்ட் ஆகியோர் நாடு திரும்பியுள்ளனர். இந்நிலையில் நாடு திரும்பியுள்ள மும்பை இந்தியன்ஸ் அணியின் பீல்டிங் பயிற்சியாளரான ஜேம்ஸ் பம்மண்ட் , மும்பை அணியின் சீனியர் வீரர்கள் மீது குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறும்போது, மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள இந்திய அணியை சேர்ந்த, சீனியர் வீரர்கள் ஐபிஎல் தொடரின் விதிமுறைகளை பின்பற்றி செயல்படுவதற்கு தயக்கம் காட்டி வந்ததாகவும் ,அவர்களின் உடல் மொழிகளும் வித்தியாசமாக இருந்ததாகவும் அவர் கூறினார். அதோடு ஒரு விஷயத்தை நாங்கள் சொல்லக்கூடாது ,என்று அவர்களிடம் கூறினால் உடனே முகத்தை சுளித்துக் கொண்டு , அந்த இடத்தை விட்டு சென்றுவிடுவார்கள். அத்துடன் சீனியர் வீரர்கள் இடம் அதை செய், இதை செய் என்று சொல்லமுடியாது, அவர்களே அதை புரிந்துகொண்டு நடக்க வேண்டும், என்று அணியின் பீல்டிங் கோச் அதிரடியாக பேசியுள்ளார். ஆனால் அந்த சீனியர் வீரர்கள் யார் ? என்று அவர் குறிப்பிடவில்லை. இதைத்தொடர்ந்து ஐபிஎல் போட்டியில் பங்குபெற்று விளையாடி வந்த வீரர்கள் குடும்பத்தினருக்கு , கொரோனா பாதிப்பு ஏற்படும் போதும், வீரர்கள் வீடு திரும்பாமல் தொடர்ந்து போட்டியில் பங்கு பெற்று விளையாடி வந்தனர். இந்த ஒரு விஷயம் எனக்கு மிகவும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியதாகவும் கூறினார் .