ஐரோப்பாவில் நிலவும் கொரானா வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக ஜெர்மன் ராணுவ மருத்துவர்கள் போர்ச்சுக்கல் சென்றுள்ளனர்.
ஐரோப்பாவிலுள்ள போர்ச்சுக்கல் நாட்டில் கொரோனா பாதிப்பு மிகவும் அதிகமாக உள்ளது. அந்நாட்டில் இதுவரை 741,000 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 13,500 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் அந்நாட்டின் மொத்த இறப்பு எண்ணிக்கையில் பாதி இழப்பை ஜனவரி மாதத்தில் மட்டும் சந்தித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் போர்ச்சுக்கலில் உள்ள மருத்துவமனைகள் மற்றும் ஐசியூகிக்கள் நிரம்பி வழிகின்றன.
இதனால் ஜெர்மனின் 26 ராணுவ மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அடங்கிய குழு விமானம் மூலமாக போர்ச்சுக்கல் நாட்டின் உள்ள ஒரு பொது மருத்துவமனைக்கு சென்றது. அவர்கள் அங்கு கொரோனாவால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக மூன்று வாரங்கள் பணி செய்ய உள்ளனர். அதன் பிறகு இவர்கள் சென்றவுடன் வேறொரு குழு வந்து பணி செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.