Categories
கால் பந்து விளையாட்டு

யூரோ கோப்பை கால்பந்து : பெனால்டி ஷூட்-அவுட்டில் ஸ்பெயின் அணி …. அரையிறுதிக்கு முன்னேற்றம் …!!!

யூரோ கோப்பை கால்பந்து தொடரில் ஸ்பெயின் அணி  வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறியது .

யூரோ கோப்பை கால்பந்து தொடரில் நேற்று ரஷ்யாவில் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்ட்கில் நடந்த முதல் காலிறுதி போட்டியில் ஸ்பெயின் – சுவிட்சர்லாந்து அணிகள் மோதிக் கொண்டன .இதில் ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே ஸ்பெயின் அணி ஆதிக்கம் செலுத்தி வந்தது. ஸ்பெயின் அணி வீரர்  ஜார்டி ஆல்பா 8-வது நிமிடத்தில்  கோல் அடிக்க , அந்தப் பந்து சுவிட்சர்லாந்து  வீரர்  டெனிஸ் ஜகாரியாவின் காலில் பட்டு வலைக்குள் சென்று சுய கோலானது. இதற்கு பதிலடியாக   68-வது நிமிடத்தில் சுவிட்சர்லாந்து அணியின் கேப்டன்  ஹெர்டான் ஷாகிரி கோல் அடிக்க, இரு அணிகளும் 1-1 என சமனில்  இருந்தது.

இந்நிலையில் சுவிட்சர்லாந்து வீரரான  ரெமோ புருலெர் 77-வது நிமிடத்தில் விளையாடிக் கொண்டிருக்கும்போது  எதிரணியி வீரரின் காலில்  பலமாக மிதித்ததால் நடுவர் அவருக்கு ரெக்கார்ட் காட்டி வெளியேற்றினார். இதனால் அந்த அணி 10 வீரர்களுடன் விளையாடியது. இதையடுத்து இரு அணிகளும் சம நிலையில் இருந்ததால் கூடுதலாக 30 நிமிடங்கள் வழங்கப்பட்டது. ஆனால் அதிலும் முடிவு கிடைக்கவில்லை. இதனால் வெற்றி ,தோல்வியை நிர்ணயிக்க பெனால்டி ‘ஷூட்-அவுட்’ முறையில் போட்டி  நடந்தது. இதில்  பரபரப்பான பெனால்டி ஷூட் அவுட்டில் 3-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் அணி, வெற்றி பெற்று  அரை இறுதிக்கு முன்னேறி உள்ளது .

Categories

Tech |