Categories
கால் பந்து விளையாட்டு

யூரோ கோப்பை கால்பந்து : பெனால்டி ‘ஷூட் அவுட்டில்’ இத்தாலி அணி வெற்றி …!!!

யூரோ கோப்பை கால்பந்து தொடரில் இத்தாலி , ஸ்பெயின் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது . 

16-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி(யூரோ)விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.  இதில் இந்திய நேரப்படி லண்டனில் இன்று அதிகாலையில் நடந்த அரையிறுதி சுற்றில்  தரவரிசை பட்டியலில் 7-வது இடத்தில் இருக்கும் இத்தாலியும், 6-வது இடத்தில் உள்ள ஸ்பெயின் அணியும் மோதிக்கொண்டது. இதில் போட்டியின்  தொடக்கத்திலிருந்தே விறுவிறுப்பாக நடந்த முதல் பாதியில்  ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதையடுத்து ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் 60-வது நிமிடத்தில் இத்தாலி அணி வீரர் பெட்ரிகோ சிய்சா  முதல் கோல் அடித்தார்.

இதற்கு பதிலடி கொடுத்த ஸ்பெயின் அணி வீரர்  அல்வாரோ மொராட்டா 80- வது நிமிடத்தில் கோல் அடித்தார். இதனால் இரு அணிகளும் 1-1 என சமனில் இருந்தது. எனவே கூடுதல் நேரம் வழங்கப்பட்டும்  இரு அணிகளும் கோல் போட முயற்சித்தும் பயனளிக்காமல் போனது. இதனால் பெனால்டி ஷூட் அவுட் முறையில் போட்டி நடந்தது. இந்த பெனால்டி ஷூட் அவுட்டில் 4-2 என்ற கணக்கில் இத்தாலி அணி ஸ்பெயினை வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது . இந்த வெற்றியின் மூலம் யூரோ கோப்பை கால்பந்து போட்டியின் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

Categories

Tech |