Categories
கால் பந்து விளையாட்டு

யூரோ கோப்பை கால்பந்து : அதிரடி காட்டிய ரொனால்டோ…! ஹங்கேரியை வீழ்த்தி போர்ச்சுக்கல் வெற்றி …!!!

யூரோ கோப்பை கால்பந்து தொடரில் போர்ச்சுக்கல் மற்றும் பிரான்ஸ் அணிகள்  வெற்றி பெற்றது.

யூரோ கோப்பை கால்பந்து தொடரில் நேற்றைய போட்டியில் குரூப் ‘எப்’ பிரிவில் உள்ள  போர்ச்சுக்கல் – ஹங்கேரி அணிகள் மோதிக்கொண்டன. இதில் போட்டியின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்காததால் 0-0 என சமனில் இருந்தது. ஆனால் ஆட்டத்தின் 2 வது பாதியில்  போர்ச்சுகல் அணி அதிரடி காட்டியது. இதில் 84 ஆவது நிமிடத்தில் போர்ச்சுக்கல் அணி தன் முதல் கோலை பதிவு செய்தது. இதன்பிறகு போர்ச்சுக்கல் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானா ரொனால்டோ  87 மற்றும் 92வது நிமிடத்தில் 2  கோலை அடித்து அணியை வெற்றிப்பாதைக்கு கொண்டு சென்றார்.

இறுதியாக 3-0 என்ற கோல் கணக்கில் போர்ச்சுக்கல் அணி  ஹங்கேரியை தோற்கடித்து அபார வெற்றி பெற்றது.இதையடுத்து மற்றொரு போட்டியில் குரூப் ‘எப் ‘பிரிவில் உள்ள பிரான்ஸ் – ஜெர்மனி அணிகள் மோதிக்கொண்டன. இதில் விறுவிறுப்பாக நடந்த முதல் பாதி போட்டியில் பிரான்ஸ் அணி வீரரான ஹம்மெல்ஸ் 20 வது நிமிடத்தில் ஒரு கோலை அடிக்க  1-0 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் முன்னிலை வகித்தது. ஆனால் 2  வது பாதி ஆட்டத்தில் இரு அணியும் கோல் அடிக்காததால் 1-0 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை தோற்கடித்து  பிரான்ஸ் அணி வெற்றி பெற்றது.

Categories

Tech |