Categories
கால் பந்து விளையாட்டு

யூரோ கோப்பை கால்பந்து : முதன்முறையாக தொடக்க ஆட்டத்தில்…. இங்கிலாந்து அணி வெற்றி…!!!

யூரோ கோப்பை கால்பந்து தொடரில் இங்கிலாந்து அணி முதல் முறையாக தன் தொடக்க ஆட்டத்தில் வெற்றி பெற்றுள்ளது.

யூரோ கோப்பை கால்பந்து தொடரில் 24 நாடுகளைச் சேர்ந்த அணிகள் 6  பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் நேற்று நடந்த போட்டியில் ‘ டி ‘ பிரிவில் உள்ள இங்கிலாந்து – குரோசியா அணிகள்  மோதிக்கொண்டன. முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. அதன் பின் 2 வது பாதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணி வீரர்   ரஹீம் ஸ்டெர்லிங், 57 வது நிமிடத்தில் முதல் கோலை அடித்தார்.

ஆனால் குரோசியா அணியால் பதில் கோல் அடிக்க முடியாமல் தடுமாறியது. இதனால் இங்கிலாந்து அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.  இதன் மூலம் யூரோ கோப்பை கால்பந்து தொடர் வரலாற்றில் இங்கிலாந்து அணி தனது தொடக்க ஆட்டத்தில்  ஒருமுறை கூட வெற்றி பெற்றதே கிடையாது. ஆனால் தற்போது அந்த மோசமான சாதனைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

Categories

Tech |