Categories
அரசியல் மாநில செய்திகள்

எடப்பாடிக்கு 3 விஷயம் சொல்கிறேன் – அறிவுறுத்திய புதுவை முதல்வர் ..!!

CAAவை எதிர்த்து மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் நாராயணசாமி கலந்து கொண்டு பேசினார்.

தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் குடியுரிமை பாதுகாப்பு மாநாடு சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் நேற்று நடைபெற்றது.  இதில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் கொண்டு பேசிய புதுவை முதல்வர் நாராயணசாமி பேசுகையில்,

தமிழ்நாட்டில் ஒரு முதலமைச்சர் இருக்கிறார். மாண்புமிகு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், இந்திய குடியுரிமை திருத்த சட்டத்தில் இஸ்லாமிய மக்களுக்கு என்ன பாதிப்பு இருக்கின்றது என்று கேட்கிறார்.

நான் 3 விஷயங்களை அவருக்கு சொல்லி கொள்ள விரும்புகின்றேன். 1 . ) இந்த சட்டத்தை எதிர்த்து பிரிட்டிஷ் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினார்கள். 2. ) அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த சட்டத்தை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம்

3 . ) ஒரு விழாவில் பேசிய மாண்புமிகு நீதியரசர் தீபக் குப்தா 51 சதவீத வாக்குகளை பெற்று 49 சதவீத மக்களை நீங்கள் மிதித்தால் அது ஜனநாயகத்திற்கு நல்லது இல்லை என்று கூறுகிறார்.

இந்த சட்டத்தை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று நிதீஷ் குமார்  பீகார் மாநில முதல் அமைச்சர் சொல்கிறார். இந்த சட்டத்தை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என அக்காலி தளம் சொல்கின்றது என்று நாராயணசாமி தெரிவித்தார்.

Categories

Tech |