அனுமதியின்றி அரிசி குடோனில் பட்டாசுகள் பதுக்கிய 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
தர்மபுரி மாவட்டத்திலுள்ள கோழிமேக்கனூரில் அன்பழகன் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு பிரபு என்ற நண்பர் இருக்கின்றார். இவர்கள் 2 பேரும் அங்கு உள்ள ஒரு அரிசி குடோனில் அனுமதியின்றி பட்டாசு பாக்ஸ்கள் பதுக்கி வைத்திருப்பதாக கிராம நிர்வாக அலுவலர் கற்பகத்திற்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அந்த புகாரின்படி காவல்துறையினர் குடோனுக்கு சென்று சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையில் அங்கு 348 பெட்டி பட்டாசுகள் அனுமதியின்றி பதுக்கி வைத்திருப்பது காவல்துறையினருக்கு தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் அங்கு இருந்த பட்டாசுகளை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அன்பழகன், பிரபு ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.