Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இதுவா காரில் இருக்கு…? விசாரணையில் வெளிவந்த உண்மை…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

ஏ.டி.எம். மையத்தில் கொள்ளையடிக்க முயற்சி செய்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

சேலம் மாவட்டத்திலுள்ள சங்ககிரி மையப்பகுதியில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஏ.டி.எம். செயல்பட்டு வருகிறது. இந்த மையத்துக்குள் கடந்த மாதம் 17-ஆம் தேதி முகமூடி அணிந்த மர்ம நபர்கள் உள்ளே நுழைந்தனர். இதனையடுத்து அவர்கள் வெல்டிங் மிஷின் உதவியுடன் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளனர். அப்போது அவ்வழியே பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் இருந்ததால் கொள்ளையர்கள் பாதியிலேயே விட்டுவிட்டு தப்பிச் சென்று விட்டனர். இதனால் ஏ.டி.எம். எந்திரத்திலிருந்த பணம் தப்பி விட்டது. இதுகுறித்து புகாரின்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் சப்-இன்ஸ்பெக்டர் சுதாகர் தலைமையில் தனிப்படை காவல்துறையினர் பள்ளிபாளையம் பிரிவு சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த காரை தனிப்படையினர் நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையில் காரில் கியாஸ் வெல்டிங் மிஷின், ஸ்பிரே பெயிண்டு உட்பட பல்வேறு பொருட்கள் இருந்தது.

இதனைத்தொடர்ந்து காரில் வந்த 3 பேரிடம் தனிப்படை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் அவர்கள் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஆவாரங்காடு மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த பூபாலன், ஜெகதீஷ், முகமது ரியாஸ் என்பதும், இவர்கள் தான் சங்ககிரியில் ஏ.டி.எம். மையத்தில் கொள்ளையடிக்க முயற்சி செய்ததும் காவல்துறையினருக்கு தெரியவந்தது. அதன்பின் காவல்துறையினர் அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர். இதில் கைதான பூபாலன் கடந்த 2019-ஆம் ஆண்டு ஈரோடு பகுதியில் 8 வங்கிகளின் ஏ.டி.எம். மையங்களில் இருந்து 1 கோடியே 32 லட்சத்து 74 ஆயிரத்து 400 ரூபாயை கொள்ளையடித்தது காவல்துறையினருக்கு தெரியவந்தது. மேலும் இவர் போலீசில் சிக்காமல் இருக்க புதுச்சேரி, ஐதராபாத், பெங்களூர் மற்றும் கேரளாவில் தலைமறைவாக இருந்ததும் காவல்துறையினருக்கு தெரியவந்தது. இது தொடர்பாக காவல்துறையினர் பூபாலனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |