Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

இதுதான் மூட்டையில் இருக்கா…? 2 பேர் மீது வழக்குப்பதிவு…. போலீஸ் வலைவீச்சு….!!

ரேஷன் அரிசி கடத்திய வாகன உரிமையாளர் 2 பேரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெரியாண்டிச்சி அம்மன் காலனி பகுதியில் ரேஷன் அரிசி கடத்துவதாக பவானி வட்ட வழங்கல் துறை அதிகாரி ராவுத்தருக்கு  ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின்படி கிராம நிர்வாக அலுவலர் முத்துசாமி, நில வருவாய் ஆய்வாளர் புவனேஸ்வரி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.  இதனையடுத்து அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு ஆட்டோ மற்றும் மினி லாரி போன்றவற்றில் இருந்த மூட்டைகளை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

அந்த சோதனையில் யாரோ மர்ம நபர்கள் கடத்துவதற்காக ரேஷன் அரிசி மூட்டைகளை வாகனங்களில் ஏற்றி வைத்திருந்தது அதிகாரிகளுக்கு தெரியவந்தது. அதன்பின் 2 வாகனங்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்து பவானியில் உள்ள தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். மேலும் காவல்துறையினர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து 2 வாகனங்களின் உரிமையாளர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |