Categories
கிரிக்கெட் விளையாட்டு

“இதுமட்டும் நடக்காம இருந்திருந்தா ஆட்டமே மாறிருக்கும்” ….! பாபர் அசாம் ஓபன் டாக் ….!!!

ஆஸ்திரேலிய அணிகெதிரான 2-வது அரையிறுதி ஆட்டத்தில் தோல்விக்கான காரணம் குறித்து பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் கூறியுள்ளார் .

டி20 உலக கோப்பை தொடரில் நேற்று நடந்த பாகிஸ்தான் அணிக்கு எதிரான 2-வது அரையிறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி இரண்டாவது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இதில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் குவித்தது .இதில் அதிகபட்சமாக கேப்டன் பாபர் அசாம் 39 ரன்னும் முகமது ரிஸ்வான் 67 ரன்னும் , பகர் சமான் 55 ரன்னும் எடுத்தனர் .அதன்பிறகு களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 19 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது .இதில் 19வது ஓவரில் ஷகின்ஷா அப்ரிடி வீசிய 3-வது பந்தை எதிர்கொண்ட மேத்யூ வாடேயின் கேட்சை பாகிஸ்தான் அணியில் ஹசன் அலி தவறவிட்டார்.இது பாகிஸ்தான் அணியின் ஆட்டத்தில் பாதிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து மேத்யூ வாடே தொடர்ந்து 3 சிக்சர்கள் அடுத்து விளாசி அணியை வெற்றி பெறச் செய்தார் .

இதன்பிறகு தோல்வி குறித்து கேப்டன் பாபர் அசாம் கூறுகையில், “ஹசன் அலி கேட்சை தவறவிட்டது ஆட்டத்தின் திருப்புமுனையாக இருந்தது .அந்த கேட்சை அவர் பிடித்திருந்தால் போட்டியின் முடிவு வேறு மாதிரியாக இருந்திருக்கும் .அதோடு புதிதாக களமிறங்க கூடிய பேட்ஸ்மேனுக்கு  நெருக்கடி ஏற்படும் .ஆனால் விளையாட்டில்  சில சமயம் இப்படி நடக்கத்தான் செய்யும் “என்றார் .மேலும் பேசிய அவர்,” ஹசன் அலி எங்கள் அணியில் முக்கிய பந்துவீச்சாளர்களில் ஒருவர் ஆவார் .அதோடு பாகிஸ்தான் அணிக்காக பல போட்டிகளில் வெற்றி பெற்று கொடுத்துள்ளார் .நான் அவருக்கு ஆதரவாக இருப்பேன். எல்லோரும் ஒவ்வொரு நாளும் சிறப்பாக செயல்பட முடியாது.இந்த நாள் அவருடைய நாளாக அமையவில்லை .நாங்கள் அவருடைய மனநிலை மாற்றுவோம். அதேசமயம் போட்டியில் நாங்கள் திட்டமிட்டபடி ரன்களை குவித்தோம். ஆனால் ஆஸ்திரேலிய அணி போன்ற அணிக்கு எதிராக வாய்ப்பு கொடுத்தால் அவர்கள் அதை சரியாக பயன்படுத்திக் கொள்வார்கள் .சிறிய தவறால் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தோம் “இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |