Categories
கிரிக்கெட் விளையாட்டு

“இதுக்கு ஸ்ரேயாஸ் அதிர்ஷ்டம் பண்ணிருக்னும்” ….! தினேஷ் கார்த்திக் புகழாரம் ….!!!

இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் அறிமுக வீரராக ஸ்ரேயாஸ் அய்யர் இடம்பிடித்துள்ளார்.

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டி கான்பூரில் நடந்து வருகிறது.இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது .மேலும் இத்தொடரில் இந்திய அணியின் அறிமுக வீரராக ஸ்ரேயாஸ் அய்யர் இடம்பிடித்துள்ளார். இந்நிலையில் போட்டிக்கு  முன்பாக முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் டெஸ்ட் போட்டிக்கான தொப்பியை  ஸ்ரேயாஸ் அய்யரிடம் வழங்கி அவரை அறிமுகப்படுத்தினார்.

இதுகுறித்து தினேஷ் கார்த்திக் தனது ட்விட்டர் பக்கத்தில்,” இந்தியா கண்டிராத தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களிடமிருந்து இந்த அற்புதமான கவுரவத்தை பெறுவதற்குச் ஸ்ரேயாஸ் அய்யர் அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும். நீங்கள் முதல்தர கிரிக்கெட்டில் கடுமையாக உழைத்து இருக்கின்றீர்கள் .அதோடு ஒரு அற்புதமான டெஸ்ட் வாழ்க்கையையும் பெறுவீர்கள் “என்று அவர் பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |