தமிழ் சினிமாவில் 3 திரைப்படத்தில் சின்ன கதாபாத்திரத்தின் மூலம் அறிமுகமானவர் சிவகார்த்திகேயன். இவர் மெரினா படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் பிரபலமானார். அதன் பிறகு மான் கராத்தே, சீமராஜா, நம்ம வீட்டு பிள்ளை போன்ற தரமான படங்களை கொடுத்துள்ளார். இவரின் டாக்டர், டான் என்ற இரு திரைப்படங்கள் ரூ.100 கோடி வசூல் சாதனை செய்தது. சொல்லப்போனால் விஜய், அஜித் அடுத்த மார்க்கெட்டில் அதிக வசூல் சாதனை சிவகார்த்திகேயன் தான் செய்துள்ளார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான பிரின்ஸ் திரைப்படம் கூட சில நெகட்டிவ் விமர்சனத்தை பெற்றாலும் தயாரிப்பாளருக்கு அப்படம் பல கோடி லாபத்தை மட்டுமே அள்ளிக் கொடுத்துள்ளது.
இந்நிலையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து உருவாகி வரும் திரைப்படம் மாவீரன். இந்த படத்தின் படப்பிடிப்பில் சிவகார்த்திகேயனுக்கும் இயக்குனர் மடோன் அஸ்வினுக்கும் கருத்து வேறுபாட்டின் காரணமாக படப்பிடிப்பு நின்று போய்விட்டது என்று சில நாட்களாக வதந்திகள் பரவி வந்தது. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை சிவகார்த்திகேயன் வளர்ச்சி பிடிக்காமல் சில கும்பல் இப்படி வன்மத்தை கக்கி வருகிறார்கள். பிரின்ஸ் முதல் ஷோவில் இருந்து தவறான முறையில் விமர்சனத்தையும் பரப்பி வந்தார்கள். ஒருவர் கஷ்டப்பட்டு மேலே வந்தாலும் இப்படித்தான் வன்மத்தை கக்கி கீழே இறக்க பார்ப்பார்கள். சிவகார்த்திகேயன் பெயரையும் புகழையும் அசைக்க முடியாத வகையில் ரசிகர்கள் சிவகார்த்திகேயனை தாங்கி பிடித்துள்ளார்கள். இதனால் மாவீரன் படபிடிப்பு நின்று போய்விட்டதாக யாரும் தவறான செய்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.