Categories
கிரிக்கெட் விளையாட்டு

“இது வெறும் ஆரம்பம் தான்,முடிவு அல்ல”- கேப்டன் விராட் கோலி ….!!!

டி20 உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கெதிரான ஆட்டத்தில்  தோல்வியடைந்தது குறித்து கேப்டன் விராட் கோலி கருத்து தெரிவித்துள்ளார்.

டி20 உலக கோப்பை தொடரில் நேற்று துபாயில் நடந்த ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது .அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் குவித்தது.இதில் அதிகபட்சமாக கேப்டன் விராட் கோலி 57 ரன்கள் குவித்தார். பாகிஸ்தான் அணி தரப்பில் ஷாஹித் அப்ரிடி 3 விக்கெட்டும்,  ஹசன் அலி 2 விக்கெட்டும் கைப்பற்றினர். இதன்பிறகு 152 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு பாகிஸ்தான் அணி களமிறங்கியது. இது தொடக்க வீரர்களாக பாபர் அசாம் – முகமது ரிஸ்வான் ஜோடி களமிறங்கினர்.

இருவரும் ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக விளையாடினர். இறுதியாக 17.5 ஓவரிலேயே  விக்கெட் இழப்பின்றி 152 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் உலக கோப்பை தொடரில் இந்தியாவிடம் தொடர் தோல்வியை சந்தித்து வந்த பாகிஸ்தான் அணி இம்முறை அபார வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. இதனிடையே தோல்வி குறித்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கூறும்போது,” எங்கள் திட்டத்தை நாங்கள் சரியாக செயல்படுத்தவில்லை. அதோடு  பாகிஸ்தான் அணி மிக சிறப்பாக விளையாடியது. அதோடு 20 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகள் இழப்பது நல்ல தொடக்கம் கிடையாது.

நாங்கள் பவுலிங் செய்யும் போது விரிவாக விக்கெட் கைப்பற்றி நினைத்தோம். ஆனால் பாகிஸ்தான் அணி பேட்ஸ்மேன்கள் எங்களுக்கு ஒரு வாய்ப்பு கூட கொடுக்கவில்லை.மேலும்  ஆட்டத்தின் தொடக்கத்தில் ஆடுகளம் சற்று மந்தமாக இருந்ததால்பேட்டிங்  செய்வது சவாலாக இருந்தது .ஆனால் 10 ஓவருக்கு பிறகு மைதானத்தின் தன்மை சற்று மாறியதால் கூடுதலாக 15- 20 ரன்கள் எடுக்க நினைத்தோம் ஆனால் பாகிஸ்தான் அணி பவுலர்கள் எங்களைக் கட்டுப்படுத்தி விட்டனர் .இது தொடரின் முதல் போட்டி என்பதால் இது செய்த தவறுகளை சரி செய்து கொண்டு அடுத்த போட்டியில் விளையாடுவது முக்கியம். அதோடு டி20 உலக கோப்பையில் இது ஆரம்பம்தான் முடிவு அல்ல” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |