பறக்க முடியாமல் தவித்து வந்த அரியவகை ஆந்தையை காக்கை கூட்டம் சேர்ந்து துரத்தில் உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள குழித்துறை தபால் நிலையம் சந்திப்பில் ஒரு வித்தியாசமான ஆந்தையை காக்கைக் கூட்டம் துரத்தியதால் தன்னை காப்பாற்றிக்கொள்ள அலறியபடி பறந்துகொண்டிருந்தது. இதனையடுத்து சிறிது நேரத்திற்கு பிறகு அந்த ஆந்தை பறக்க முடியாமல் தரையில் வந்து அமர்ந்தது. ஆனால் காக்கை கூட்டங்கள் அந்த ஆந்தையை சூழ்ந்துகொண்டு கொத்த வந்ததனால் அந்த ஆந்தை பயத்தில் அந்த பகுதியில் நின்ற வண்டிக்கு இடையில் மறைந்திருந்தது.
இதனை கண்ட அந்தப் பகுதியில் இருந்த ஆட்டோ டிரைவர்கள் காக்கை கூட்டத்தை விரட்டி வண்டிக்கு இடையில் பதுங்கியிருந்த அந்த ஆந்தையை பத்திரமாக மீட்டுள்ளனர். அப்போது அந்த வித்தியாசமான ஆந்தையை அப்பகுதி மக்கள் அனைவரும் பார்த்து விட்டு சென்றனர். அதன்பின்னர் ஆட்டோ டிரைவர்கள் ஆந்தையை பற்றி களியல் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அந்த தகவலின் படி விரைந்து வந்த வனத்துறையினரிடம் ஆட்டோ டிரைவர்கள் அந்த வித்தியாசமான ஆந்தையை ஒப்படைத்துள்ளனர்.