Categories
உலக செய்திகள்

இது என்ன புதுசா இருக்கு “கிர்பான் கத்தி”…. உரிமம் பெற வேண்டும்…. பெஷாவர் உயர்நிதிமன்றம் அதிரடி உத்தரவு…..!!!!

பாகிஸ்தானில் வசிக்கும் சீக்கியர்கள் கிர்ப்பான் எனப்படும் கத்தியை வைத்திருப்பதற்கு உரிமம் பெற வேண்டும் என்று பெஷாவர் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுகுறித்த வழக்கில் கிர்பானை ஆயுதமாக நீதிமன்றம் அறிவித்தது. மேலும் அரசுத் துறையில் வேலை பார்க்கும் சீக்கியர்கள் வைத்திருப்பதற்கு புதுப்பிக்கத்தக்க உரிமம் பெற வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளது. இவ்வாறு பெஷாவர் உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு இந்தியாவில் உள்ள சிரோன்மணி குருத்வாரா பிரபந்தக் கமிட்டி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் இந்திய அரசு  தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது. பாகிஸ்தான் நீதிமன்றத்தின் தீர்ப்பு உலகம் முழுவதிலும் உள்ள சீக்கியர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |