எலிப்பெட்டியில் சிக்கி கொண்ட புளுகு பூனையை வனத்துறையினர் பிடித்து காட்டுப்பகுதியில் விட்டனர்.
.ஈரோடு மாவட்டத்திலுள்ள ஒப்பலவாடானூர் கிராமத்தில் சவுந்தரராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் வாழைக்காய் வியாபாரி ஆவார். இவரது வீட்டின் அருகே எலிகள் நடமாட்டம் அதிகமாக இருந்ததால அதை பிடிப்பதற்காக சவுந்தரராஜன் பெட்டி வைத்துள்ளார். இந்நிலையில் எலிப்பெட்டியில் இருந்து சத்தம் வந்தது. இதனால் சவுந்தரராஜன் எலிப்பெட்டியை பார்த்தபோது அதில் கீரி போன்ற தோற்றமுடைய விலங்கு இருந்தது.
அந்த விலங்கு எலி பெட்டியில் இருந்து வெளியே வருவதற்காக முயற்சி செய்தபடி அங்கும் இங்கும் ஓடியது. இதுகுறித்து தகவலறிந்த வனச்சரக அலுவலர் சரவணன் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தனர். அப்போது எலி பெட்டியில் சிக்கிய விலங்கு அரிய வகையை சேர்ந்த புளுகு பூனை என்பது வனத்துறையினருக்கு தெரியவந்தது. அதன்பின் வனத்துறையினர் அந்த பூனையை காட்டுப்பகுதிக்குள் கொண்டு விட்டனர்.