Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

ஏதோ சத்தம் கேட்கு…. அடித்து பிடித்து ஓடிய வாலிபர்கள்…. போலீஸ் நடவடிக்கை….!!

இரவில் வீட்டிற்குள் நுழைந்து செல்போன் திருடிய 3 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

தென்காசி மாவட்டத்திலுள்ள மாங்குடி பகுதியில் நீலகண்டன் என்பவர் வசித்து வருகின்றார். இந்நிலையில் வழக்கம்போல் நீலகண்டன் வீட்டில் உறங்கி கொண்டிருந்தார். இதனையடுத்து மாங்குடி பகுதியில் வசித்து வரும் ஜெய ஆனந்த் என்பவர் நீலகண்டன் வீட்டுக்குள் நுழைந்து அங்கிருந்த செல்போனை திருடியுள்ளார்.

அப்போது எதோ சத்தம் கேட்டு விழித்த நீலகண்டன் வெளியே வந்து பார்த்தபோது அதே ஊரைச் சேர்ந்த பாலமுருகன், அந்தோனி ஆகியோர் வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தனர். அதன்பின் நீலகண்டன் போட்ட சத்தத்தில் 3 பேரும் அங்கிருந்து அடித்து பிடித்து சென்று விட்டனர். இதுகுறித்து நீலகண்டன் கொடுத்த புகாரின்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து ஜெய ஆனந்த், பாலமுருகன், அந்தோணி ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

Categories

Tech |