Categories
உலக செய்திகள்

எத்தியோப்பியா பிரதமரின் பதிவு…. வன்முறையை தூண்டும் கருத்து…. பேஸ்புக் நிறுவனம் அதிரடி….!!

வன்முறையை தூண்டகூடிய வகையில் எத்தியோப்பிய அதிபர் தன் பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட பதிவு நீக்கப்பட்டுள்ளது.

கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள எத்தியோப்பியா நாட்டின் டைக்ரே மாகாணத்தில் “மக்கள் விடுதலை முன்னணி” என்ற போராளி அமைப்பு இருக்கின்றது. இந்த அமைப்பில் உள்ளவர்கள் எத்தியோப்பிய துணை ராணுவப்படையில் இருந்தவர்கள் ஆவர். அந்நாட்டின் தற்போதைய பிரதமர் அபி அகமது ஆட்சி அதிகாரத்துக்கு வருவதற்கு முன் இந்த அமைப்பினர் எத்தியோப்பிய அரசியல் சக்தியாக விளங்கினர். ஆனால் அபி அகமது பிரதமராக பொறுப்பேற்ற பின் “டைக்ரே மக்கள் விடுதலை முன்னணி” அமைப்பு ஒடுக்கப்பட்டு வந்தது. இதன் காரணமாக அந்த அமைப்பிற்கும் எத்தியோப்பிய அரசுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து டைக்ரே மக்கள் விடுதலை முன்னணியை ஒடுக்குவதற்கு அந்நாட்டின் பிரதமர் அபி அகமது உத்தரவின்படி ராணுவம் தாக்குதல்கள் நடத்தி வருகிறது.

இந்த தாக்குதலில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து உள்ளனர். இதுபோன்று டைக்ரே போராளிகளுடைய குழுவும் தாக்குதலில் முன்னேற்றமடைந்து வருவதாக தெரிகிறது. அதுமட்டுமின்றி தலைநகர் ஏடிஸ் அபாபாவை கைப்பற்றும் நோக்கத்தோடு டைக்ரே மக்கள் விடுதலை முன்னணி படை சண்டையிட்டு வருகிறது. இந்த நிலையில் பிரதமரான அபி அகமது தன் பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் “பொதுமக்கள் அனைவரும் வெகுண்டெழுந்து டைக்ரே மக்கள் விடுதலை முன்னணி அமைப்பினரை மண்ணுக்குள் புதைக்க வேண்டும். மேலும் எத்தியோப்பியாவுக்காக இறக்க வேண்டிய கடமை நம் அனைவருக்கும் உள்ளது” என அவர் தெரிவித்திருந்தார்.

இதனைத்தொடர்ந்து டைக்ரே போராளிகளுக்கு எதிராக ஆயுதமேந்திய தாக்குதலை நடத்த வேண்டும் எனவும், பொதுமக்களுக்கு பிரதமர் அபி அகமது அழைப்பு விடுத்திருந்தார். இதனிடையில் பேஸ்புக்கில் 35 லட்சம் நபர்களால் பின்பற்றப்படும் பிரதமர் அபி தனது பேஸ்புக் பக்கத்தில் வன்முறையை தூண்டும் வகையில் கருத்து பதிவிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன்பின் வன்முறையினை தூண்டக்கூடிய வகையில் இருந்த பிரதமர் அகமதின் பதிவை பேஸ்புக் நிறுவனமானது நீக்கியுள்ளது. ஆகவே பேஸ்புக் விதிகளை மீறி வன்முறையை தூண்டும் வகையில் கருத்து இருந்ததால் பிரதமரின் பதிவு நீக்கப்பட்டதாக பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா தெரிவித்துள்ளது.

Categories

Tech |