Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. வெல்டிங் தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

தனியார் கல்லூரியில் மின்சாரம் தாக்கி வெல்டிங் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அத்தியூர் கிராமத்தில் முத்து-ஜெயசுதா என்ற தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இதில் முத்து வெல்டிங் கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் திருப்பத்தூர்- வாணியம்பாடி மெயின் ரோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் மேற்கூரை அமைப்பதற்காக முத்துசென்றுள்ளார்.

அங்கு கல்லூரியின் 2-வது மாடியில் வெல்டிங் பணியை தொடங்கியபோது எதிர்பாராத விதமாக முத்து மீது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முத்துவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |