Categories
தேசிய செய்திகள்

OMIKRAN: இதெல்லாம் தீவிரமா கண்காணிங்க…. ஊரடங்கை அமலுக்கு கொண்டு வாங்க…. ஒன்றிய அரசு அதிரடி….!!!

இந்தியாவில் ஒமிக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 286 ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு நாளுக்கு நாள் ஒமிக்ரான் வைர வேகமாக அதிகரித்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மாநில அரசுகள் தடுப்பு நடவடிக்கைகளை ஒருபோதும் கைவிட்டு விடக் கூடாது என்று ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து மாநில அரசுகளுடன் நடந்த ஆய்வுக் கூட்டத்தில்,
புதிய பாதிப்புகள், இரட்டிப்பு விகிதம், மாவட்டங்களில் ஏற்படும் கிளஸ்டர்கள் உள்ளிட்ட விஷயங்களை மிகவும் தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.

மேலும் உள்ளாட்சி அளவில் கட்டுப்பாடுகளை அமல்படுத்தலாம். இதனையடுத்து வரக்கூடிய பண்டிகை காலத்தை ஒட்டி இரவுநேர ஊரடங்கை அமலுக்கு கொண்டு வாருங்கள் என ஒன்றிய அரசு அறிவுறுத்தி உள்ளது. அதன்பின் பொது இடங்களில் மக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும். அதிலும் குறிப்பாக நோய்க் கட்டுப்பாட்டு மண்டலங்களை கண்காணிப்புக்கு உட்படுத்த வேண்டும். 2 டோஸ் தடுப்பூசிகளையும் 100 % செலுத்துவதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும். தடுப்பூசி ஒன்றே வைரசுக்கு எதிரான ஒரே ஆயுதம் ஆகும்.

ஆகவே தடுப்பூசி செலுத்தப்பட்ட சதவீதத்தில் தேசிய சராசரியை விட குறைவாக உள்ள மாநிலங்களில் வீடு வீடாகச் சென்று தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் சில மாநிலங்களில் தேர்தலை சந்திக்கவுள்ள மாநிலங்கள் தடுப்பூசி செலுத்துவதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அனைத்து மக்களும் முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதை உறுதி செய்யுங்கள் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் பல்வேறு மாநிலங்களும் தனித்தனியே கட்டுப்பாடுகளை அமல்படுத்த தொடங்கி உள்ளது. தலைநகர் டெல்லியை பொறுத்தவரையிலும் லேசான அறிகுறிகள் உள்ளவர்கள் மருத்துவமனைக்கு வர வேண்டாம். அவர்களுக்கு வீடுகளுக்கே வந்து மருத்துவம் பார்க்கப்படும் என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |