Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“இதெல்லாம் செய்து தரனும்” கல்லூரி மாணவர்களின் போராட்டம்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை….!!

விடுதியில் அடிப்படை வசதிகளை செய்து தர கோரி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மன்னர் சரபோஜி அரசு கல்லூரி அருகில் டாக்டர் அம்பேத்கர் மாணவர் விடுதி இருக்கிறது. இந்த விடுதியில் தற்போது 70 பேர் தங்கி இருக்கின்றனர். இங்கு அடிப்படை வசதிகளை செய்து தருதல், சுகாதாரமான முறையில் உணவு வழங்குதல் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வல்லம் நம்பர் 1 ரோட்டில் கல்லூரி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதற்கு இந்திய மாணவர் சங்க மாவட்ட தலைவர் அர்ஜுன் தலைமை தாங்கினார். மேலும் மாநில துணைச் செயலாளரான அரவிந்தசாமி முன்னிலை வகித்தார். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதனையடுத்து சில மாணவர்கள் அரசு பேருந்தின் மேற்கூரையில் ஏறி நின்று கோஷங்களை எழுப்பினர். அதுமட்டுமின்றி சிலர் பேருந்துக்கு கீழ் படுத்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அறிந்த வருவாய் கோட்டாட்சியர் வேலுமணி, துணை கலெக்டர் கண்ணையன், தாசில்தார் மணிகண்டன், துணை போலீஸ் சூப்பிரண்டு கபிலன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். அப்போது மாணவர்கள் கூறியதாவது “விடுதி அறையின் கதவு, ஜன்னல்கள் உடைந்து காணப்படுகிறது. அதன்பின் தங்கள் பொருட்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை, குடிநீர், கழிவறை வசதிகள் முறையாக இல்லாமல் இருத்தல், கட்டிடங்களுக்கு வர்ணம் பூசுதல்”  போன்ற கோரிக்கைகளை அவர்கள் வலியுறுத்தினர்.

இதனை ஏற்றுக்கொண்ட அதிகாரிகள் உங்கள் கோரிக்கைகள் ஒவ்வொன்றாக இன்னும் 10 நாட்களுக்குள் நிறைவேற்றப்படும் என்று மாணவர்களிடம் உறுதியளித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட மாணவர்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இவ்வாறு அதிகாரிகள் உறுதியளித்தபடி மாணவர் விடுதிக்கு உடனடியாக குடிநீர் வசதி செய்து தரப்பட்டதுடன், புதிய தலையணை, போர்வை போன்றவை மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. மேலும் உடனடியாக பொறியாளர் ஒருவரை நிரந்தரமாக நியமித்து ஜன்னல், கதவு கழிப்பறை உள்ளிட்ட மற்ற அனைத்து குறைகளும் தீர்த்து வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |