சாலையின் குறுக்கே தோண்டப்பட்ட குழி சரியாக மூடப்படாமல் இருப்பதால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்ககோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்திலுள்ள கோபி மார்க்கெட் முதல் வாய்க்கால் வீதி வரை சாலை ஒன்று செல்கிறது. இந்த சாலையில் 4 ரோடுகள் சந்திக்கும் இடம் இருக்கின்றது. இதில் சாலையின் குறுக்கே குழி தோண்டப்பட்டு அது சரியாக மூடப்படாமல் இருக்கின்றது. இதனால் வாகனங்களில் செல்பவர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். ஆகவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.