செல்போன் திருட முயற்சி செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அதிராம்பட்டினம் பிலால் நகரில் முகமது ஹாரிஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் வாட்டாகுடி சாலையில் உள்ள இந்திரா நகர் பகுதியில் ஆடு வளர்க்கும் இடத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் மதுக்கூர் சிவக்கொல்லை இந்திரா நகர் 2-வது தெருவை சேர்ந்த முகமதுரபீக் ராவுத்தர் என்பவர் முகமது ஹாரிஸ் வேலை பார்க்கும் இடத்திற்கு வந்துள்ளார்.
அப்போது அங்கு உறங்கிகொண்டிருந்த முகமது ஹாரிஸ் செல்போனை முகமதுரபீக் ராவுத்தர் திருட முயற்சி செய்தார். இந்நிலையில் முகமது ஹாரிஸ் அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் முகமதுரபீக் ராவுத்தரை கையும் களவுமாக பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இதனையடுத்து முகமது ஹாரிஸ் கொடுத்த புகாரின்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து முகமதுரபீக் ராவுத்தரை கைது செய்தனர்.