பாகிஸ்தான் நாட்டில் கடந்த நவம்பர் மாதம் 13-ஆம் தேதி துபாய் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் தொண்டர்கள் மத்தியில் அந்நாட்டின் மந்திரி இஷாக் தார் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது, “ரஷ்யாவிடமிருந்து பாகிஸ்தான் விரைவில் கச்சா எண்ணெய்யை வாங்கும். இதனை அமெரிக்காவால் தடுக்க இயலாது” என்று அவர் கூறியுள்ளார். இதற்கு முன்னதாக செப்டம்பர் மாதம் அமெரிக்க பயணத்தின் போது இஷாக் தார் அமெரிக்க வெளியுறவு துறை அதிகாரிகளை நேரில் சந்தித்து பேசியுள்ளார்.
அப்போது மேற்கு நாடுகளின் பொருளாதார தடைகளுக்கு மத்தியில் ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவது குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து இஷாக் தார் கூறியதாவது, “எங்கள் அண்டை நாடான இந்தியா ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குகிறது. அதேபோன்று நாங்களும் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை அமெரிக்காவால் ஒரு போதும் தடுக்க முடியாது என்று அந்நாட்டு அதிகாரிகளிடம் அவர் கூறியுள்ளார்” என்பது குறிப்பிடத்தக்கது.