Categories
தேசிய செய்திகள்

நகைக் கடன்: எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

உலகிலேயே முன்னணி பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ தன் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சிறந்த திட்டங்களை வழங்கி வருகிறது. அந்த அடைப்படையில் விவசாயிகள் தங்களுக்கு தேவையான தொகையை தங்கநகை அடமானத்தின் பேரில் பெற்றுக் கொள்ளலாம். இந்த கடனை பெறுவதற்கு எஸ்பிஐ வங்கியின் மொபைல் செயலியான YONO SBI மூலமாக விண்ணப்பிக்கும் விதமாக வசதிகள் செய்யப்பட்டுள்ளது. ஏனென்றால் எஸ்பிஐ தனது வாடிக்கையாளர்களின் நேரத்தை மிச்சப்படுத்தும் விதமாகவும், எளிமையான முறையில் அனைத்து சேவைகளையும் பெறும் விதமாகவும் அனைத்து வசதிகளையும் ஆன்லைன் முறையில் வழங்கி வருகிறது.

அதன்படி விவசாயிகள் YONO செயலி மூலமாக இந்த நகைக் கடனை பெற முடியும். இந்த நகைக்கடன் தங்ககட்டிகள் மீது வழங்கப்பட மாட்டாது. மேலும் 50 கிராம் வரை தங்க நாணயங்கள் அல்லது ஆபரணங்கள் மீதும் குறைந்த வட்டியில் நகைக்கடன் வழங்கப்படும் என்று தெரிவித்து உள்ளது. ஆகவே நகைக்கடன் பெற விரும்பும் விவசாயிகள் இதுகுறித்த கூடுதல் விபரங்களை வங்கிக்கு நேரில் சென்றோ அல்லது அதிகாரபூர்வ இணையதளத்திற்கு சென்றோ தெரிந்து கொள்ளலாம்.

நகைக்கடன் மூலம் விவசாயிகள் பெறும் நன்மைகளான

7 சதவீதம் வரை குறைவான வட்டியில் கடன் பெறலாம்.

சொந்த நிலத்தில் அல்லது குத்தகை நிலத்தில் பயிர் சாகுபடி செய்யும்                விவசாயிகள் மற்றும் சுயதொழில் செய்பவர்கள் என அனைவருக்கும் RBI/GoI/NABARD வழிகாட்டுதல்களின்படி விவசாயத்தின் கீழ் வகைப்படுத்த அனுமதிக்கப்படும் மற்ற அனைத்து விவசாய நடவடிக்கைகளுக்கும் இந்த கடன் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Categories

Tech |