ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டுள்ள அதி நவீன போர் விமானத்தை அந்நாட்டு அரசு முதல் முறையாக அறிமுகப்படுத்தி உள்ளது.
ரஷ்யா CHECKMATE என்ற பெயர் கொண்ட 5-ம் தலைமுறை போர் விமானத்தை தயாரித்துள்ளது. இந்தப் போர் விமானம் மாஸ்கோ அருகே நடந்த விமான கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது. ரஷ்யாவில் சுகோய் நிறுவனம் தயாரித்துள்ள இந்த போர் விமானமானது குறைந்த எடையுடன் அனைத்து சூழலிலும் சண்டையிடும் திறனை கொண்டுள்ளது.
இந்த விமானம் 2023 ஆம் ஆண்டு ரஷ்யாவில் பயன்பாட்டிற்கு வருகிறது .இதன்பிறகு 2026-ஆம் ஆண்டு முதல் இந்தியா உட்பட வெளிநாடுகளுக்கு இந்தப் போர் விமானம் விற்கப்படும் என்று அந்நாட்டு அரசு கூறியுள்ளது. மேலும் ஒற்றை என்ஜினில் இயங்கும் இந்த போர் விமானமானது ஒலியைவிட இரு மடங்கு வேகமாக பயணிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.