ஏரியில் மூழ்கி பிளஸ்-2 மாணவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள மேச்சேரி கந்தசாமிபுரம் பகுதியில் வெங்கடேஷ் மகன் வெங்கட்ராஜ் என்பவர் வசித்து வந்தார். இவர் மேச்சேரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இந்நிலையில் வெங்கட்ராஜ் நண்பர்களுடன் மேச்சேரி அருகே உள்ள ஏரியில் குளிக்க சென்றார். அப்போது நீச்சல் தெரியாத வெங்கட்ராஜ் எதிர்பாராதவிதமாக ஏரியில் மூழ்கி இறந்துவிட்டார்.
இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வெங்கட்ராஜின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.