எரிப்பொருள் பற்றாக்குறை குறித்து பிரெஞ்சு ஐரோப்பியா விவகாரத்துறை அமைச்சரான Clement Beaune கருத்து வெளியிட்டுள்ளார்.
பிரித்தானியாவில் கனரக வாகனங்களுக்கு பெட்ரோல் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு எண்ணெய் நிறுவனங்கள் புகார் அளித்துள்ளன.மேலும் சுத்தகரிப்பு மையங்களில் இருந்து எரிப்பொருள் நிலையங்களுக்கு பெட்ரோல் கொண்டு வருவதில் சிக்கல் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் எரிப்பொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பெட்ரோல் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.
இதனால் வாகன ஓட்டுநர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்து இருந்து பெட்ரோல் போட வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. இதனையடுத்து நாட்டில் பெட்ரோல் வாங்க கடும் பதட்டம் நிலவுவதால் உடனடியாக இதனை போக்க பிரித்தானியா அரசு நடவடிக்கை எடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளது. அதிலும் competition சட்டங்களை பாதியில் நிறுத்தவதோடு மட்டுமின்றி பெட்ரோல் தட்டுப்பாட்டை நீக்க அனைத்து நிறுவனங்களும் இணைந்து செயல்பட அரசு அனுமதியளித்துள்ளது.
இந்த பிரச்சனையானது பிரெக்சிட்டினால் தான் ஏற்பட்டுள்ளது என்று பிரெஞ்சு ஐரோப்பியா விவகாரத்துறை அமைச்சரான Clement Beaune கருத்து வெளியிட்டுள்ளார். அதில் “ஒவ்வொரு நாளும் ஏற்படும் பிரச்சினைகளில் பிரெக்சிட் எனப்படும் ‘அறிவுசார் மோசடி’ இருப்பதை நாம் கண்கூடாகக் காண்கிறோம்” என்று கூறியுள்ளார். இவரின் கருத்து அனைவரிடமும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.