Categories
தேசிய செய்திகள்

இறந்த தாயின் சடலத்துடன்…. 4 நாட்கள் வாழ்ந்து வந்த மகன்…. எங்கென்னு தெரியுமா?… வெளியான பகீர் தகவல்….!!!!!

உத்தரப்பிரதேசம் கோரக்பூர் அருகிலுள்ள ஷிவ்பூர் ஷாபாஸ்கஞ்ச் பகுதியில் வசித்து வந்த சாந்தி தேவி (82) என்ற மூதாட்டி ஆசிரியையாக பணிபுரிந்து ஓய்வுபெற்றவர் ஆவார். இவருடைய மகன் நிகில்(45) மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது. இதில் நிகிலின் 2 பிள்ளைகளும் டெல்லியில் படித்து வருகின்றனர். இதனால் நிகில் உடல்நலம் பாதிக்கப்பட்ட தன் தாயுடன் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் சாந்தி தேவியின் வீட்டில் இருந்து நேற்று முன்தினம் (டிச.13) திடீரென துர்நாற்றம் வீசியுள்ளது. இதன் காரணமாக சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவலளித்துள்ளனர்.

அந்த தகவலின் படி சம்பவ இடத்துக்கு சென்ற காவல்துறையினர், படுக்கை அறையிலுள்ள கட்டிலின் அடியில் இருந்து சாந்தி தேவியின் சடலத்தை மீட்டனர். தன் தாய் 4 நாட்களுக்கு முன் உடல் நலக்குறைவால் இறந்துவிட்டதாக நிகில் காவல்துறையினரிடம்  கூறியுள்ளார். அதன்பின் நிகிலை அழைத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் நிகில், இறந்த தாயின் உடலை கட்டிலுக்கு அடியில் வைத்து விட்டு 4 நாட்களாக வீட்டிலேயே இருந்ததாகவும், துர்நாற்றம் வீசும்போது ஊதுவத்தி கொளுத்தி வைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் நிகில் மனநலம் பாதிக்கப்பட்டவர் எனவும் போதைக்கு அடிமையான அவர் அடிக்கடி தாயை தாக்கி வந்தார் எனவும் அக்கம்பக்கத்தினர் கூறினர். மேலும் நிகிலின் செயல்களால் மனஉளைச்சலுக்கு ஆளான அவரது மனைவி சென்ற 15 நாட்களுக்கு முன்பு தாய் வீட்டிற்கு சென்றுவிட்டதாக தெரிகிறது. மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

Categories

Tech |