மகாராணியாருக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் சிறப்பு புலனாய்வு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
பிரித்தானியாவில் அரச குடும்பத்திற்கு என தனி மதிப்பும் மரியாதையும் அந்நாட்டில் உண்டு. அந்நாட்டில் மேலவை, கீழவை, நாடாளுமன்றம் என பல்வேறு அரசு அமைப்புகள் இருந்தாலும் மகாராணியார் இரண்டாம் எலிசபெத் கையெழுத்திட்டால் மட்டுமே ஒரு மசோதாவானது சட்டமாக நிறைவேற்றப்படும். அந்த அளவுக்கு மகாராணியாருக்கு என்று சிறப்பு அந்தஸ்துகள் உள்ளது. மேலும் மகாராணியாருக்கு 90 வயது ஆகிவிட்டாலும் அவருக்கே உரியதான பாதுகாப்பு வளையம் தளர்ததப்படவில்லை.
இந்த நிலையில் 20 வயதான இஸ்லாமிய வாலிபர் Sudesh Amman சென்ற ஆண்டு பிப்ரவரியில் தெற்கு லண்டன் பகுதியில் உள்ள இருவரை கத்தியால் குத்தி கொலை செய்த குற்றத்திற்காக சிறையில் தள்ளப்பட்டார்.இவர் இரண்டரை ஆண்டுகள் சிறை தண்டனை கழித்து பத்து நாட்களுக்கு முன்பு தான் விடுதலையாகியுள்ளார். மேலும் இந்த வாலிபரை விடுவிக்க கூடாது என்று உளவுத்துறை எச்சரித்த போதிலும் லண்டன் நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது.
இவர் வெளியே வந்தவுடன் பயங்காரவாத அமைப்பில் சேர்வதற்காக விருப்பம் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் மகாராணி இரண்டாம் எலிசபெத்தை கொல்வதற்கு தான் தயாராக இருப்பதாகவும் தேவைப்பட்டால் மனித வெடிகுண்டாக மாறவும் தயார் என்று Sudesh Amman கூறியுள்ளார். இது அனைவரிடத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை அடுத்து இஸ்லாமிய பயங்கரவாதியான Sudesh Amman சிறப்பு புலனாய்வு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் பிரித்தானியாவில் பெரும் வெற்றியாக பார்க்கப்படுகிறது.