Categories
மாநில செய்திகள்

“ஊழல் மற்றும் வறுமையை அடியோடு ஒழிக்க வேண்டும்” ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்..!!

ஊழல் மற்றும் வறுமையை அடியோடு ஒழிக்க வேண்டும் என்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார். 

நாடு முழுவதும் இன்று 73-ஆவது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. காலையில் பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியேற்றி நாட்டு மக்கள் முன் உரையாற்றினார். அதேபோல அந்தந்த மாநில முதலமைச்சர்கள் மற்றும் மத்திய அமைச்சர்கள் கொடியேற்றி சிறப்புரையாற்றினர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஒவ்வொருவரும் சுதந்திர தினத்தை வெகு சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் 73 வது சுதந்திர தினத்தையொட்டி சென்னை கிண்டி ராஜ்பவனில் வைத்து தேநீர் விருந்து கொடுத்தார். இந்த விருந்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், அமைச்சர்கள் மற்றும் நீதிபதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Image result for Banwarilal Purohit

இந்நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், “ஊழல் மற்றும் வறுமையை அடியோடு ஒழிக்க வேண்டும். வேலைவாய்ப்பு அனைத்து தரப்பு மக்களுக்கும் கிடைக்க வேண்டும்.மேலும்  பிரதமர் மோடியின் சிறப்பான தலைமையின் கீழ் புதிய இந்தியா வளர்ந்து வருகிறது என்று தெரிவித்தார்.

Categories

Tech |