Categories
அரசியல் மாநில செய்திகள்

#AIADMK: மா.செக்கள், MLAக்கள், நிர்வாகிகளுடன் ஈபிஎஸ் திடீர் ஆலோசனை …!!

சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனையானது தற்பொழுது துவங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக தற்போது அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர்,

முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி தற்போது அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்திருக்கிறார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வரக்கூடிய 17ஆம் தேதி அதிமுகவின் பொன்விழா ஆண்டானது நடைபெற உள்ளது.

குறிப்பாக அதிமுக தொடங்கி, 50 ஆண்டுகள் முடிவடைந்து, 51-வது ஆண்டில் அதிமுக அடி எடுத்து வைக்கக்கூடிய நிலையில்அதிமுகவில் என்னென்ன நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்வது தொடர்பாக இந்த ஆலோசனை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட இருக்கிறது. இதற்காக அதிமுகவின் தலைமை கழக நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்களுடன் எடப்பாடி ஆலோசனை செய்கின்றார்.

இதில் அதிமுகவில் இருக்கக்கூடிய 65 சட்டமன்ற உறுப்பினர்களில் நாலு பேர் ஏற்கனவே ஓபிஎஸ் தரப்பில் இருக்கக்கூடிய சூழலில் மீதமுள்ள 61 சட்டமன்ற உறுப்பினர்களும் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றிருக்கிறார்கள். அதேபோல 75 மாவட்ட செயலாளர்களில் ஆறு பேர் அதிமுகவிலிருந்து நீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து மீதமுள்ள 69 மாவட்டச் செயலாளர்களும் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றுள்ளார்.

Categories

Tech |