Categories
மாநில செய்திகள்

EPS, OPS பஞ்சாயத்து….. அதிமுகவில் அடுத்தது என்ன?….. பெரும் பரபரப்பு….!!!!

அதிமுக கட்சியில் ஒற்றை தலைமை வேண்டும் என்று நேற்று தலைமைச் செயலகத்துக்கு முன்பாக அக்கட்சியின் தொண்டர்கள் கோரிக்கை வைத்திருந்தனர். இதைத்தொடர்ந்து ஒற்றை தலைமை தேவை என்ற முழக்கம் அதிமுகவில் உள்ள காரணத்தினால் இது எடப்பாடி பழனிச்சாமிக்கு சாதகமாக அமைந்துள்ளது. வரும் 23ஆம் தேதி பொதுக்குழு கூட்டத்தில் இது தொடர்பாக உறுதியான முடிவு எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எடப்பாடியை பொதுச் செயலாளராக ஏற்றுக்கொண்டால் வரும் தேர்தலில் OPS மகனுக்கு அணியில் மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படும் என்றும் இல்லையெனில் அதுவும் கிடையாது என்று தகவல் ஓபிஎஸ் இடம் சேர்க்கப்பட்டுள்ளது. இதில் ஓபிஎஸ் என்ன முடிவு எடுப்பார் என்பது தெரியவில்லை. ஆனால் கட்சியில் சிலர் ஓ. பன்னீர்செல்வம் தலைமை ஏற்க வேண்டும் என்றும், ஒரு சிலர் எடப்பாடி பழனிசாமி தலைமை ஏற்க வேண்டும்? என்று இரண்டு தரப்பாக பேசி வருகின்றனர். வரும் 23ஆம் தேதி நடைபெறும் அதிமுக பொது செயலாளர் கூட்டத்தில் இது தொடர்பான முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |