திமுக தலைவர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வெத்துவேட்டுகளின் சாயம் வெளுக்கிறது என்று பதிவிட்டுள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தல் வரும் 2021 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற உள்ளது. அனைத்து கட்சிகளும் தங்களது தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளனர். அதிமுக- திமுக இடையே கருத்து மோதல் அதிகமாக ஏற்பட்டு வருகிறது. இந்த இரண்டு கட்சிகளும் ஒருவருக்கொருவர் மாற்றி மாற்றி குற்றங்களை சுமத்தி வருகின்றனர்.
இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவரது ட்விட்டர் பக்கத்தில் இன்று ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார். நூற்றுக்கணக்கில் ஒப்பந்தங்கள், கோடிகளில் முதலீடுகள் என பொய் பேசும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி முகமூடியை டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் கழற்றி வீசி இருக்கிறது.
அறிவிக்கப்பட்ட வற்றில் முதலீடாக பெற்றது வெறும் 9.4%.
வெத்து வேட்டுகள் சாயம் வெளுக்கிறது!
மக்களின் வரிப்பணத்தில் முழுப்பக்க விளம்பரம் ஒரு கேடா?
என்று திமுக தலைவர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.