Categories
அரசியல் மாநில செய்திகள்

முதல்வர் வேட்பாளர் யார்? இன்று காலை 10 மணிக்கு வெளியாகும் அறிவிப்பு…!!!

அதிமுக முதல்வர் வேட்பாளர் இன்று காலை 10 மணிக்கு அறிவிக்கப்பட உள்ளதாக அதிமுக தலைமையிடம் தெரிவித்துள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் வருகின்ற மே மாதம் நடக்கவிருக்கும் நிலையில் முதலமைச்சர் வேட்பாளர் யார்? என்ற சர்ச்சை எழுந்துள்ளது. சமீபத்தில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்பட்டது என்றும் ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் அணிகளுக்கிடையே  காரசார விவாதம் நடைபெற்றதாகவும் கூறப்பட்டது.இதைத் தொடர்ந்து இரு தரப்பிலும் ரகசிய பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்தன.இந்நிலையில் நேற்று காலை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ .பன்னீர்செல்வம் ஆகியோர் தங்களது இல்லங்களில் தங்களது ஆதரவு அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

மாறி  மாறி நடைபெற்ற ஆலோசனையானது அதிகாலை 3 மணி வரை நீடித்தது எனவும்  கூறப்பட்டு வருகின்றது. அமைச்சர்கள் இரு தரப்பினருடன் இன்று காலை வரை நடத்திய ஆலோசனை அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவரான வைத்தியலிங்கம் செய்தியாளர்களுக்கு இன்று அதிகாலை அளித்த பேட்டியில் முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்விக்கான விடை இன்று காலை 10 மணிக்கு கிடைக்குமெனவும்,அதிமுக தேர்தலில் களமிறங்குகுவதற்கான ஆக்கபூர்வமான பணிகள் நடந்து வருகின்றன எனவும் தெரிவித்தார். எனவே இன்று காலை 10 மணிக்கு வெளியாகவிருக்கும் அறிவிப்பு குறித்து அதிமுக தொண்டர்கள் இடையே பரபரப்பும் ஆர்வமும் எழுந்துள்ளது.

Categories

Tech |