Categories
மாநில செய்திகள்

EPS கிட்ட 62….. OPS கிட்ட 3…. பெரும் எதிர்பார்ப்பில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்…..!!!!

ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பது குறித்து ஆலோசிக்க, அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம், எடப்பாடி பழனிசாமி தலைமையில் 17ம் தேதி நடைபெறும் என அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டது. ஆனால் அதிமுக தலைமை அலுவலகம் முன் ஏற்பட்ட மோதல் காரணமாக அதிமுக கட்சி அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இதனால் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் அங்கு நடத்த முடியாததால், அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை மாலை 4 மணிக்கு சென்னை அடையாறு கிரவுண்ட் பிளாசா ஓட்டலில் நடைபெற உள்ளது.

அதிமுகவில் மொத்தம் 65 எம்எல்ஏக்கள் உள்ள நிலையில், 62 எம்.எல்.ஏ.க்கள் எடப்பாடி பழனிசாமி தரப்பிலும், 3 எம்.எல்.ஏ.க்கள் ஓ.பன்னீர்செல்வம் தரப்பிலும் உள்ளனர். அதிமுகவின் ஆதரவை பாஜக கூட்டணி வேட்பாளரான திரவுபதி முர்மு ஏற்கனவே நேரில் சந்தித்து கேட்டிருந்தநிலையில் அது தொடர்பாக விவாதிக்க நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் கூட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |