டி20 உலக கோப்பை தொடரில் இறுதிப்போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி முதல் முறையாக டி20 உலகக்கோப்பையை வென்றுள்ளது .
7-வது டி20 உலக கோப்பை தொடரில் நேற்றிரவு நடந்த இறுதி ஆட்டத்தில் நியூஸிலாந்து- ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின .இதில் ஆஸ்திரேலியா அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை தட்டிச் சென்றது .இதில் முதலில் பேட்டிங்கில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் குவித்தது. இதில் அதிகபட்சமாக கேன் வில்லியம்சன் 85 ரன்கள் குவித்தார் .இதன்பிறகு 173 ரன்கள் வெற்றி இலக்காக கொண்டு ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது இதில் தொடக்க வீரராக களமிறங்கிய டேவிட் வார்னர் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தார் .
How's your Monday going? 😅#T20WorldCup pic.twitter.com/Fdaf0rxUiV
— ICC (@ICC) November 15, 2021
இதில் டேவிட் வார்னர் 53 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார் .இதன் பிறகு களமிறங்கிய மிட்சேல் மார்ஷ் அதிரடியாக விளையாடி 77 ரன்கள் குவித்தார் .இறுதியாக ஆஸ்திரேலியா அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று முதல் முறையாக கோப்பையை கைப்பற்றியது. வெற்றிக்குப் பிறகு ஆஸ்திரேலிய அணி வீரர்கள் தங்கள் ஓய்வறையில் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர் .அப்போது ஆஸ்திரேலிய அணியின் விக்கெட் கீப்பர் மேத்யூ வேட் ஆல் ரவுண்டர் மார்கஸ் ஸ்டோனிஸ் ஆகியோர் ஷூவில் குளிர்பானத்தை ஊற்றிக் குடித்தனர். தற்போது இந்த வீடியோவை இணையத்தில் வைரலாகி வருகிறது.