Categories
உலக செய்திகள்

இப்போ இதை பண்ணலேனா …. பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்…. பிரதமரின் அதிரடி அறிவிப்பு …!!!

இங்கிலாந்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் மேலும்  4 வாரங்களுக்கு நீட்டிக்கப்படும்  என அந்நாட்டு  பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார்  .

இங்கிலாந்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது அங்கு பெரும்பாலான மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் பரவி வரும்  டெல்டா வகை கொரோனா  வைரஸ் இங்கிலாந்தில் கடந்த சில நாட்களாக தீவிரமாக பரவி வருகிறது. இதன் காரணமாக 21 ஆம் தேதி முடிவுக்கு வரவிருந்த ஊரடங்கு தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது.  இதுகுறித்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறும்போது, “தற்போது  அதிகரித்து வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த   இங்கிலாந்தில் ஊரடங்கு விதிகள் மேலும் 4 வாரங்களுக்கு  நீட்டிக்கப்படும் . அதேசமயம் இந்த ஊரடங்கில் இதற்கு முன் இருந்த தளர்வுகளான திருமணத்திற்கு  30 பேர் மட்டும் அனுமதி,  இரவு விடுதிகள் மூடல் மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகளில்  குறிப்பிட்ட அளவு  பார்வையாளர்களுக்கு அனுமதி போன்ற தளர்வுகள் இதில் அடங்கும் .

மேலும் சமூக இடைவெளி முகக் கவசம் அணிதல் போன்றவற்றை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.தற்போது இங்கிலாந்தில் டெல்டா வகை கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின்   எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதன் மூலம், பல உயிர்களை காப்பாற்றலாம். அடுத்த 4 வாரங்களுக்குள் பல மில்லியன் கணக்கான மக்களுக்கு  தடுப்பூசி போடப்பட்டுவிடும்.இதன் மூலம் ஆயிரக்கணக்கான உயிர்களை காப்பாற்ற வாய்ப்புள்ளது. இதனால் 2 டோஸ் தடுப்பூசியை போட்டுக்கொண்டால், நாம் பாதுகாப்பை வலுப்படுத்தலாம். இந்த ஊரடங்கு விதிகள் பிரித்தானியா முழுவதிற்கும் அடங்காது. ஆனால் இங்கிலாந்து மற்றும் டெல்டா கொரோனா பரவல் அதிகம் உள்ள பகுதிகளில் இந்த ஊரடங்கு அமல்படுத்தப்படும்”,என்று அவர் கூறியுள்ளார் .

Categories

Tech |