மாத சம்பளம் வாங்கும் ஒவ்வொரு துறையைச் சார்ந்த ஊழியர்களுக்கும் சிறந்த எதிர்கால சேமிப்பு திட்டமாக வருங்கால வைப்பு நிதி கணக்கு செயல்பட்டு வருகின்றது. இந்த சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதனை தவிர EPFO ஊழியர்களின் வைப்புத் தொகையுடன் இணைக்கப்பட்ட காப்பீட்டு திட்டம் 1976- இன் கீழ்க் கணக்கு வைத்திருப்பவர்கள் ஆயுள் காப்பீட்டு திட்ட சேவைகளை பெற்றுக் கொள்ளலாம். தற்போது வரவிருக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு PF பயனாளர்களுக்கு வட்டித் தொகையை அளிக்க EPFO அமைப்பு முடிவு செய்துள்ளது.
அந்த வகையில் புதிய பயனர்களுக்கான இந்த 8.5 சதவீத வட்டி விகிதம் இந்த மாத இறுதிக்குள் அவர்களின் வங்கியில் வரவு வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இப்போது உங்கள் கணக்கில் PF தொகை வரவு வைக்கப்பட்டுள்ளதா என்பதை அறிய PF கணக்குடன் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து 7738299899 என்ற எண்ணுக்கு EPFOHO UAN ENG என டைப் செய்து SMS அனுப்பலாம். அல்லது 011-22901406 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்ததும் இந்த சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும்.