நம் நாட்டில் மாத சம்பளம் வாங்குபவர் மற்றும் தொழிலாளர்கள் ஆகியவர்கள் சம்பளத்தின் ஒரு பகுதியை வைப்பு நிதி மற்றும் ஓய்வூதிய திட்டத்திற்காக தொழிலாளர் வைப்பு நிதியை கொன்டுள்ளனர். இந்த சேமிப்பு நிதியானது அவர்கள் ஓய்வு பெற்ற பிறகு மாதாந்திர ஓய்வூதியமாகவோ அல்லது மொத்தமாகவோ அவர்களிடம் வழங்கப்படுகிறது. தற்போது ஊழியர்கள் வைப்பு நிதி ஆணையம் பிஎஃப் கணக்கில் பல்வேறு வழிமுறைகளை கொண்டுள்ளது. இந்நிலையில் தற்போது ஓய்வூதியதாரர்கள் ஓய்வூதியம் பெறுவதில் ஏற்படும் சிக்கல்களைக் கருத்தில் கொண்டு, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அது என்னவென்றால், பொதுவாக மாத ஊதியம் பெறும் ஒவ்வொருவரும் இப்பிஎஸ் கொள்கை வரம்பின் கீழ் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பிலிருந்து ஓய்வூதியமாக ஒரு குறிப்பிட்ட அளவு நிதியை பெறுகின்றனர். இருந்தபோதிலும், அண்மையில் இபிஎப்ஓ அமைப்பு ஓய்வூதியம் பெறுபவர்கள் கணக்கிலிருக்கும் பணத்தை எடுப்பது குறித்த வழிகாட்டுதல்களை திருத்தி அமைத்துள்ளது. மேலும் இதுதொடர்பாக ஈபிஎப்ஒ அமைப்பு கடந்த ஜனவரி 13-ஆம் தேதி வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது, மாதந்தோறும் கடைசி வேலை நாட்களில் ஓய்வூதியம் பெறுபவர்களது கணக்கில் ஓய்வூதியம் வரவு வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் இப்போதுள்ள ஒப்பந்தத்தின்படி மாதம்தோறும் முதல் வேலை நாளன்று ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு நிதி வரவு வைக்கப்படும் என்றும், இந்த சேவைகளை வழங்குவதில் சில நேரம் தாமதம் ஏற்பட்டால் இத்தொகை 5-வது வேலை நாளுக்கு முன்னதாக அனுப்பப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் கடந்த ஜனவரி 13-ஆம் தேதியன்று வெளியிட்ட அறிக்கையின்படி ஆர்பிஐ அறிவுறுத்தலின், கீழ் சம்பந்தப்பட்ட துறைகள் இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் அனைத்து துறைகளை சேர்ந்து அலுவலகங்களும் அந்த மாதத்திற்கான டிஏ தொகையை அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் மாதம் கடைசி வேலைகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இவற்றைக் கருத்தில் கொண்டு ஓய்வூதியத்திற்கு காத்திருக்கும் ஒவ்வொரு பணியாளர்களுக்கும் ஒரு குறிப்பிட்ட நாட்களுக்குள் பணம் கிடைப்பது அந்தந்த துறை அலுவலகங்கள் அவற்றை உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் ஏற்கனவே கூறியிருப்பது போல ஈபிஎப்-ல் கணக்கு வைத்திருக்கும் மாத ஊதியம் பெறும் அனைத்து ஊழியர்களும் இபிஎஸ் திட்டத்தில் சேருவதற்கு தகுதி உடையவர்களாவர். அதன் அடிப்படையில், ஊதியத்துடன் 15,000 ரூபாய் வரை அல்லது அதற்கு கீழ் அகவிலைப்படி தொகையை பெறும் அனைத்து ஊழியர்களும், பணியாளர்களும் ஓய்வூதியத் திட்டத்தில் சேர வேண்டியது அவசியமாகும். இபிஎஸ் திட்டமானது அனைத்து தனியார் அலுவலக ஊழியர்களும் 58 வயதில் ஓய்வூதியம் பெறுவதை உறுதி செய்கிறது.