தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் ஓய்வூதியதாரர்களுக்கு கடைசி தேதிக்குள் பென்ஷன் வரவில்லை என்று புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இதையடுத்து தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ஓய்வூதியதாரர்களுக்கு ஒவ்வொரு மாதத்தின் கடைசி நாளுக்குள் பென்ஷன் வருவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பென்ஷன் வழங்குவதை பொருத்தவரை அனைத்து பிஎஃப் அலுவலகங்களும் வங்கிகளும் உரிய வழிமுறைகளை பின்பற்றும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பென்சன் போய் சேரவேண்டிய இரண்டு நாட்களுக்கு முன்பாகவே பென்ஷன் வினியோகிக்கும் வங்கிக்கு பணம் அனுப்பப்பட்டு விடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் பென்ஷன் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டால் ஆண்டுக்கு 8% என்ற நிலையான வட்டி கணக்கில் நிலுவைத் தொகையை வங்கிகள் இழப்பீடு செலுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை ஓய்வூதியதாரர்கள் மத்தியில் பெரும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.