வருங்கால வைப்பு நிதி என்பது ஊழியர்கள் தங்களது ஓய்வூதியத்திற்கு பின் கிடைக்கக்கூடிய ஒரு நல்ல சேமிப்பு திட்டமாக செயல்படுகிறது. இந்த சேமிப்பு தொகையானது தனி நபரின் வருமானத்தில் இருந்து ஒரு மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை சேமித்து வைப்பதாகவும் இந்த திட்டத்தின் மூலமாக ஒவ்வொரு தனிநபரும் தங்களது ஓய்வு காலத்தில் ஆரோக்கியமான மற்றும் சுதந்திரமான வாழ்க்கையை வாழ உதவியாக இருக்கிறது. இந்தத் திட்டத்தில் மேலும் ஒரு புதிய திட்டத்தை அறிமுகம் செய்ய இருக்கிறது.
தற்போது நாடு முழுவதும் ஆறு கோடிக்கும் அதிகமான ஊழியர்கள் பிஎப் கணக்கில் பங்களிப்பு செய்து வருகின்றார்கள். இந்த சூழலில் பெரிய தொகை பிஎப் கணக்கிற்கு மாற்றப்படும் என இ பி எஃப் ஓ அறிவித்திருக்கிறது. ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு சமீபத்தில் வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி விரைவில் பிஎஃப் கணக்கு வைத்திருக்கும் ஊழியர்களின் கணக்கிலிருந்து 40 ஆயிரம் ரூபாய் உறுதியாக டெபாசிட் செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது. இதன்படி ஊழியர்கள் பிஎப் கணக்கில் ரூபாய் 5 லட்சம் அல்லது அதற்கு மேல் வைப்பு நிதி வைத்திருக்கும் நபர்களுக்கு இந்த தொகை கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது பிஎப் கணக்கில் 5 லட்சத்திற்கும் மேல் இருக்கும் பட்சத்தில் இந்த ரூபாய் நாற்பதாயிரம் வழங்கப்படும் எனவும் ஈபி எப் ஓ கூறியுள்ளது.
மேலும் இந்த 40,000 தொகை உங்கள் ஐந்து லட்சம் பேலன்ஸுக்கான வட்டியாக வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்த நிலையில் இந்த வைப்பு நிதி கணக்கை வீட்டில் இருந்தபடியே சரி பார்க்க epfindia.gov.in என்ற இணையதள பக்கத்திற்கு சென்று click here to know your epf balance என்ற விருப்பத்தை அழுத்த வேண்டும் அதன் பின் member balance information என்ற விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும். அதன் பிறகு உங்கள் பிஎஃப் கணக்கு எண் மற்றும் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை உள்ளிட வேண்டும். மேலும் எந்த மாநிலம் என்பதை கிளிக் செய்து சப்மிட் என்பதை கிளிக் செய்ய வேண்டும்.