Categories
தேசிய செய்திகள்

EPFO உறுப்பினர்களுக்கு குட் நியூஸ்… EPS ல் அரசு அதிரடி புதிய மாற்றம்…!!!!!

ஆறு மாதங்களுக்குள் ஓய்வு பெறும் நிலையில் இருக்கின்ற அதன் சந்தாதாரர்களை பணியாளர் ஓய்வூதிய திட்டம் 1995இன் கீழ் வைப்புத் தொகையை திரும்ப பெற ஓய்வூதிய நிதி அமைப்பான epfo அனுமதித்திருக்கிறது. தற்போது பணியாளர் வருங்கால வைப்பு நிதி சந்தாதாரர்கள் ஆறு மாதங்கள் குறைவான சேவை இருந்தால் epfo கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட தொகையை எடுப்பதற்கு அனுமதிக்கப்படுகின்றது. இந்த நிலையில் திங்கட்கிழமை அன்று இபிஎப்ஓவின் உச்ச அமைப்பான மத்திய அறங்காவலர் குழுவின் 232 வது கூட்டத்தில் இபிஎஸ் 95 திட்டத்தில் சில திருத்தங்களை செய்து ஓய்வு பெறும் வயதை நெருங்கிய சந்தாதாரர்கள் ஓய்வூதிய நிதியில் டெபாசிட் தொகையை எடுக்க அனுமதிப்பதற்கான வசதியை செய்ய வேண்டும் என அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

மேலும் தொழிலாளர் அமைச்சகத்தின் அறிக்கையின்படி ஆறு மாதங்களுக்கும் குறைவான சேவை காலம் மீதமுள்ள உறுப்பினர்கள் தங்களின் ஈபிஎஸ் கணக்கில் இருந்து பணம் எடுக்கும் வசதியை வழங்க வேண்டும் என சிபிடி அரசுக்கு பரிந்துரைத்திருக்கிறது. இது தவிர 34 வருடங்களுக்கும் மேலாக திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும் உறுப்பினர்களுக்கு விகிதாச்சார ஓய்வூதிய பலன்களை அளிக்கவும் அறங்காவலர் குழு பரிந்துரை செய்துள்ளது. இந்த வசதியின் மூலமாக ஓய்வூதியம் பெறுவோர் ஓய்வூதிய பலன்களை நிர்ணயிக்கும் நேரத்தில் அதிக ஓய்வூதியம் பெற முடிகிறது. இ பி எப்ஓவின் அறங்காவலர் குழு எக்சேஞ்ச் டிரேட் ஃபண்ட் யூனிட்களில் முதலீடு செய்வதற்கான மீட்பின் கொள்கைக்கும் ஒப்புதல் அளித்திருப்பதாக தொழிலாளர் அமைச்சகம் கூறியுள்ளது. இது தவிர 2021 – 2022-ம் நிதி ஆண்டிற்கான epfoவின் செயல்பாடுகள் பற்றி தயாரிக்கப்பட்ட 69 ஆவது ஆண்டு அறிக்கையின் அங்கீகரிக்கப்பட்டுள்ளது இது நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.

Categories

Tech |