வெளியூர், வெளிமாநிலம் அல்லது பிற நாட்டிலிருந்து இந்தியாவிற்கு வர விரும்புவோர் கீழ்க்கண்ட முகவரிகள் மூலம் விண்ணப்பிக்கலாம்.
தமிழகத்தில் இருந்து தற்போது கொரோனா பாதிப்பு தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில், ஒரு சில தளர்வுகள் அறிமுகப்படுத்தப்பட்டாலும், பொதுமக்கள் வேறொரு மாவட்டங்களுக்கோ அல்லது மாநிலங்களுக்கோ அல்லது பிற நாட்டில் வசிக்கும் தமிழர்கள் இந்திய நாட்டிற்குள்ளேயோ தற்போது வரமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்திலிருந்து காரில் வெளியூர் செல்வோர் tnepass.tnega.org என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம் என்றும், பிற நாட்டிலிருந்து இந்தியா திரும்ப வேண்டியவர்கள் nonresidenttamil.org என்ற இணையதள முகவரியில் அனுமதி பெறலாம் என்றும்,
இதேபோல் வேறு மாநிலத்திலிருந்து தமிழகம் வரவேண்டிய நபர்கள் rttn.nonresidenttamil.org என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும், பிற மாநிலங்களுக்கு செல்ல நினைப்போர் rtos.nonresidenttamil.org என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.